Sorry for the inconvience, Currently English version is not avalilable.
Switch to Tamil language
இம்மானுவேல் என்று பேரிடுவாயாக என்று குமாரனைக் குறித்து தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்துள்ளது. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை எழும்பும் என்றும் வேதத்தில் நாம் பார்க்கின்றோம். ஆனால், முன்னறிவிக்கப்பட்ட எந்தவொரு தீர்க்கதரிசனத்திலும் இயேசுகிறிஸ்து என்ற நாமத்தைக் குறித்தோ, அவர் யோசேப்பினுடைய குமாரனாக வருவார் என்றோ, அவருடைய தாய் மரியாள் என்றோ கூறவில்லை.
உரைக்கப்பட்ட எந்த தீர்க்கதரிசனமும் பின்னர் நிகழப்போவதைக் குறித்து முழுமையாக அறிவிப்பதில்லை. பின்வரப்போகும் அந்த நிகழ்வுகளில் ஒரு சிலவற்றை மாத்திரம் முன்னறிவிக்கின்றது. தீர்க்கதரிசனமானது நிறைவேறுகின்றபோதுதான் அது குறித்து முழுமையாகச் சாட்சியிடப்படும். "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்" என்பது தீர்க்கதரிசனம். அவருக்கு இயேசு என்று பெயரிடும்படியாய் தேவதூதன் மரியாளிடம் காட்சிகொடுத்த அந்த வேளையில்தான் இயேசு என்ற நாமம் அவளுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களில் இம்மானுவேல் என்றே கூறப்பட்டுள்ளது; இயேசு என்று கூறப்படவில்லை.
அதுபோலவே புதிய ஏற்பாட்டின் நிறைவின் காலத்திலும் ஏற்படும். அந்த நிகழ்விற்குரிய காலமோ "கடைசி ஏற்பாடு" என்று சாட்சியிடப்படுகின்றது.
வெளி. 12: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்."
ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை எழும்பும் என்பது தீர்க்கதரிசனமாக இருந்தது. இயேசுகிறிஸ்துவின் ஜனனத்தின் மூலம் அந்த தீர்க்கதரிசனமானது நிறைவேறிற்று. கர்ப்பவதியாயிருந்து மரியாள் ஒரு குமாரனைப் பெற்றாள். அதேபோன்ற ஒரு நிகழ்வு புதிய ஏற்பாட்டின் நிறைவிலும் ஏற்படும் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி, பிரசவவேதனையடைந்து, ஒரு ஆண்பிள்ளையினைப் பெற்றெடுப்பாள் என்பதே இந்த தீர்க்கதரிசனம்.
வெளி. 12: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது."
ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தீர்க்கதரிசனமாய் அறிவிக்கப்பட்டவைகள் நிறைவேறியது குறித்து மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் (மத். 1: 23) சாட்சியாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மரியாள் என்ற ஸ்திரீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்று தீர்க்கதரிசனம் சாட்சியிடவில்லை. அது நிறைவேறும்போதுதான் தூதன் வந்து மரியாளிடம் கூறுவதைப் பார்க்கின்றோம். "இயேசு" என்ற நாமம் மரியாளிடம் மாத்திரம் அறிவிக்கப்பட்டது. அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று தூதன் கூறினான் (மத். 1: 21). முன்னறிவிக்கப்பட்டவாறு இயேசு என்ற அந்தக் குமாரன் மூலம் ஒரு ஆளுமை இந்தப் பூச்சக்கரத்தில் எழும்பியுள்ளது. அது இந்தப் பூச்சக்கரம் முழுவதையும் இன்று தன்னுடைய ஆளுகைக்குள்ளாக வைத்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வு நிகழப்போவதைக் குறித்தே வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ளது, இங்கே ஒரு ஸ்திரீ கர்ப்பவேதனையடைந்து ஒரு ஆண்பிள்ளையினைப் பெறுவாள் என்று கூறப்பட்டுள்ளது.
வெளி. 12: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது."
பின்னர் நடக்கப்போவதைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு தம்முடைய தூதனை அனுப்பி அறிவித்தவர் அவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்கு வெளிப்படுத்தும்படியாய் கூறுகின்றார். இது பின்னர் சம்பவிக்கவேண்டிய விசேஷமாய் சாட்சியிடப்பட்டது. ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஒரு ஆண்பிள்ளையினை குறிக்கப்பட்ட ஒரு காலத்தில் பிரசவிக்க வேண்டும். இது தீர்க்கதரிசனம். அந்தக் காலத்தினைக் குறித்து பிராண உற்பவ காலம் என்று வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் நிறைவேறிட ஒரு கால அளவு முன்குறித்து வைக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலம் வரும்போது, அந்தக் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை சகலஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஒரு அதிகாரம் கொண்ட ஆண்பிள்ளையாகும். அது சகலஜாதிகளையும் ஆளுகை செய்யும்.
நோவாவின் நாட்களில் ஜலப்பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஆதாமின் சந்ததியார்கள் ஜீவித்த அந்தப் பகுதி முழுவதையும் அழித்துப்போட்டது. அதன்பின்னர் நோவாவினுடைய சந்ததியிலிருந்து ஒரு ஜாதி உருவாயிற்று.
ஆதி. 10: 32-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன."
ஜலப்பிரளயத்திற்குப் பின்னர் நோவாவின் சந்ததிகள் ஜாதிகளாகப் பிரிந்து பெருகியது. நோவாவின் குமாரர்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களிடமிருந்து மூன்றுவிதமான ஜாதிகள் உருவானது. இந்த மூன்றுவிதமான ஜாதிகளில் சேமுடைய சந்ததியினைத் தவிர மற்ற இரண்டு குமாரரின் சந்ததிகள் நோவா பெற்ற கிருபையினைப் பெறவில்லை. எனவே, மற்ற இரு ஜாதிகளைக் குறித்து வேதத்தில் அதிகமாகக் கூறப்படவில்லை. சேமுடைய சந்ததியினைக் குறித்தே வேதாகமத்தில் பார்க்கின்றோம். கர்த்தரும் சேமுடைய தேவனாகிய கர்த்தர் என்றே தன்னைக் குறித்து சாட்சியிட்டுள்ளார். சேம், காம், யாப்பேத் என்ற நோவாவின் அந்த மூன்று குமாரரும் கர்த்தரையே சேவித்திருந்தார்கள். ஆனால், கர்த்தர் தம்மை சேமுடைய தேவனாகிய கர்த்தர் என்றே சாட்சியிட்டுள்ளார். நோவாவின் இந்த மூன்று சந்ததியாரும் நோவாவினுடைய தேவனையே வழிபட்டிருந்தாலும், அவர்களில் சேம் மாத்திரமே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவனானான். நோவாவினுடைய தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்துதான் அந்த மூவரும் நோவாவுடன் பேழைக்குள் குடும்பமாய் பிரவேசித்தார்கள். ஆனால் மற்ற இருவரையும் விட சேம் மாத்திரமே கிருபை பெற்றவனானான். சேமுடைய சந்ததியாரே அந்தக் கிருபைக்குரிய ஜனமாக பிரிக்கப்பட்டார்கள். மற்ற இரண்டு குமாரர்களின் சந்ததிகள் யாவரும் காலப்போக்கில் கர்த்தத்துவத்திலிருந்து தள்ளப்பட்டார்கள். அதன்பின்னர் ஆபிரகாமைக் கர்த்தர் தெரிந்தெடுத்தார். அவன் சேமுடைய சந்ததியில் கிருபை பெற்றவனானான்.
ஆதி. 12: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்."
"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்" என்று நோவாவை ஆசீர்வதித்தவர் அவன் குமாரருக்குள் சேமை தெரிந்தெடுத்தார். அவனது சந்ததி பெருகிற்று. அதன்பின் சேமுடைய சந்ததியிலிருந்து ஆபிரகாமைத் தெரிந்தெடுத்து, நான் உன்னைப் பொரிய ஜாதியாக்குவேன் என்று சாட்சியிட்டார். இங்கே ஆபிரகாம் தெரிந்தெடுக்கப்பட்டவனானான்.
ஆதி. 17: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்."
"நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்." இது ஆபிரகாமிற்குக் கொடுத்த வாக்குத்தத்தம். அதுமுதல் கிருபை ஆபிரகாமின் சந்ததிக்குள் வந்தது.
ஆதி. 21: 13-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்."
ஆதாமின் வித்தாய் இருந்த இஸ்மவேலையும் பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குக்கொடுத்தார். நோவா கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றான்; அதன்பின்னர் நோவாவின் குடும்பத்திலிருந்து சேம் பிரித்தெடுக்கப்பட்டான்; சேம் கிருபை பெற்றவனானான். அதன்பின்னர், சேமுடைய சந்ததியிலிருந்து ஆபிரகாமை பிரித்தெடுத்தார்; இங்கே ஆபிரகாமுடைய சந்ததி கிருபை பெற்றதாகின்றது. ஆபிரகாமிலிருந்து இரண்டு பிரிவு சந்ததிகள் உருவானது.
இவர்கள் தவிர கேத்தூராள் மூலமாகவும் பிள்ளைகள் பிறந்தது. அவர்களும் தனி ஜாதி ஜனங்களாக வேறுபிரிக்கப்பட்டார்கள். ஆனால், கேத்தூராளின் பிள்ளைகளுக்கு வாக்குத்தத்தங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை.
ஆபிரகாமுடைய சந்ததியாகிய இரண்டு பிரிவு ஜனங்கள் மாத்திரம் வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்: அதில் ஒன்று, ஈசாக்கினுடைய வம்சம், மற்றொன்று இஸ்மவேல் சந்ததியினர். அதன்பின்னர் ஈசாக்கினிடத்திலிருந்து யாக்கோபு, ஏசா என்ற இரு பிரிவு ஜாதி உருவானது.
ஆதி. 25: 23-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்."
இங்கே ஈசாக்கினிடத்தில், ஏசாவின் சந்ததி எனவும், யாக்கோபுவின் சந்ததி எனவும் இரு பிரிவு ஜாதிகள் எழும்பிற்று. ஆனால், கர்த்தர், ஏசாவிற்குத் தன்னைக் கர்த்தர் என்று சாட்சியிடவில்லை. ஏசா வேறே தேவர்களை நாடிப்போகவில்லை. ஆனால் கர்த்தர் ஏசாவின் கூடாரம் நான் தாபரிக்கின்ற கூடாரம் அல்ல என்றும், அது வலுசர்ப்பத்தின் கூடாரம் என்றும் சாட்சியிட்டுள்ளார். யாக்கோபின் கூடாரங்களில் கர்த்தர் வாசம் செய்தார். எனவே அது வலுசர்ப்பம் கிரியை செய்யாத கூடாரமாக இருந்தது. ஆனால் ஏசாவின் கூடாரம் வலுசர்ப்பத்தின் தாபரமாய் இருந்தது என்றே வேதம் சாட்சியிடுகின்றது. கர்த்தர் யாரை முன்குறித்தாரோ, அவர்களுக்கு அவர் தாம் தேவனாயிருப்பதைக் குறித்து சாட்சியிட்டுள்ளார். ஈசாக்கின் சந்ததியிலிருந்து முன்குறிக்கப்பட்ட ஜனமாக இஸ்ரவேல் என்ற ஜாதி வேறு பிரிக்கப்பட்டது. இஸ்ரவேல் என்ற இந்த ஜாதியினுக்குள்ளாக கர்த்தர் நடப்பித்த கிரியைகளையே வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலே பார்க்கின்றோம். அதன்பின்னர் இஸ்ரவேல் அல்லாத வேறொரு ஜாதி தெரிந்தெடுக்கப்பட்டது. அது கிருபையினை இலவசமாகப் பெற்றுக்கொண்ட புறஜாதிகளாகிய நாமாகும்.
ஏசா. 42: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்."
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறினான். இந்த தீர்க்கதரிசனமானது நிறைவேறும்போது அது சாட்சியிடப்பட்டுள்ளதைக் குறித்து காண்கின்றோம். இந்த நிகழ்வுகள் அப். 13: 47-ல் சாட்சியிடப்பட்டுள்ளது.
அப். 13: 47-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்."
கர்த்தர் கட்டளையிட்டிருந்தபடி, அவரை அறியாத ஜாதிகளுக்குள் ஒரு ஒளியை தங்கள் மூலமாக ஏற்படுத்திக் கொடுத்தார் என்று இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது. அந்த ஒளியே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவாகும். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கின்றேன் என்று அவர் சாட்சியிட்டுள்ளார்.
மத். 28: 19-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,"
"நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும்..." என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இந்த ஜாதிகள் ஜென்மசுபாவம் கொண்ட புறஜாதிகளாகும். அவர் மாமிசத்திலிருந்த காலம் முழுவதும் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கே தான் அனுப்பப்பட்டதைக் குறித்து சாட்சியிட்டார். காணாமற்போன இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு வந்தவரை இஸ்ரவேல் வீட்டாரே கொலை செய்தார்கள். அவர் தம்முடைய சொந்த ஜனத்தினிடத்திற்காக வந்தார்; ஆனால் அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் வைக்கின்ற எல்லோரும் அவருடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அந்த அதிகாரத்தின்படி புறஜாதிகள் ஆபிரகாமுடைய சந்ததியாகின்றார்கள். இஸ்ரவேலர்களைப் போல புறஜாதிகளும் அவருடைய சொந்த ஜனமாகின்றார்கள். அந்த சந்ததிக்கு கிறிஸ்தவர்கள் என்று நாமமிடப்பட்டது. மாமிசத்தின்படியாக கிறிஸ்தவர்கள் அநேக சபைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும், ஆவியின்படியான உட்பிரிவு ஏசா என்றும், யாக்கோபு என்றும் வேறுபிரிக்கப்படுகின்றது. ஜீவனுக்குரியவர்கள் என்றும், ஆக்கினைக்குரியவர்கள் என்றும் பிரிக்கப்படுகின்றார்கள். சகல ஜாதிகளிடத்திலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. அதனை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற சந்ததியாரானார்கள். கிறிஸ்தவர்கள் என்ற இந்த ஜாதி கர்த்தரை தெய்வமாகக் கொண்ட ஜாதியாகும். வெளிப்படுத்தின விசேஷத்தில் நாம் பார்க்கின்றோம், சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் இந்த ஜாதி ஆண்பிள்ளை ஆளுகைசெய்யும் என்று சாட்சியிடப்பட்டுள்ளது.
வெளி. 12-ம் அதிகாரத்தில், சகல ஜாதிகளையும் ஆளக்கூடிய ஆண் பிள்ளை என்று கூறப்பட்டுள்ளது. சகல ஜாதிகளையும் ஆளக்கூடிய ஆளுகைக்குள்ளாக கிறிஸ்தவர்கள் என்ற இந்த ஜாதி உயர்ந்திருக்கும். அப்போது எழும்பக்கூடிய ஒரு ஆளுகையினைக் குறித்தே இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது.
எண். 24: 17, 19-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்."
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் என்று இங்கே கூறப்பட்டுள்ளது; அது யூதாவின் செங்கோலாய் தொடரும். அந்த செங்கோல் நீதியின் செங்கோலாக நிலை நிற்கும்; இவைகள் தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டபோது, அந்த நட்சத்திரம் இந்தப் பூச்சக்கரத்தில் உதிக்கவில்லை. அதன் ஆளுகை அப்போது இல்லை; இயேசுகிறிஸ்துவின் ஆளுகை அதன்பின்னரே இந்தப் பூச்சக்கரத்தில் எழும்பிற்று. அவரது ராஜ்யம் அப்போது இந்தப் பூச்சக்கரத்தில் ஸ்தாபிக்கப்படவில்லை.
யோவா. 18: 36-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்."
இங்கே "இயேசுகிறிஸ்து அந்த ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல" என்று சாட்சியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம். ஆனால் தீர்க்கதரிசனம் கூறுகின்றது, யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார் என்று. அந்த ஆளுமைக்குரியவர் தோன்றியபோது, அவர் என்னுடைய ராஜ்யம் இம்மைக்குரியதல்ல என்று சாட்சி கொடுத்தார்.
சக. 9: 9, 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்."
இந்த தீர்க்கதரிசனமானது கழுதைக்குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருபவருடைய ஆளுமை ஒரு சமுத்திரம் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும் அதாவது பூமியின் எல்லை முழுவதும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நிறைவேறும்போது, கழுதை மறிமீது ஏறிவந்தவர் என்னுடைய ராஜ்யம் இம்மைக்குரியதல்ல என்று கூறியதைப் பார்க்கின்றோம். ஆளுமையானது இரண்டுவிதமான தன்மை கொண்டதாக காணப்படுகின்றது: ஒன்று இம்மைக்குரியது, மற்றொன்று மறுமைக்குரியது. இஸ்ரவேலர்களுக்கு மறுமைக்குரியதான அந்த ஆளுமை யேகோவா என்ற நாமத்தில் கட்டளையிடப்பட்டது. இம்மைக்குரிய ஆளுமையானது யாவரும் பார்க்கின்றவிதமாகக் காணப்படும். கிறிஸ்துவினுடைய ஆளுகை இன்று மாமிசத்திலும் காணக்கூடியதாய் இருக்கின்றது. உலகத்தில் வல்லரசு நாடுகளுள் கிறிஸ்தவ நாடுகளின் ஆளுமையே மேலோங்கி நிற்கின்றது. இது சகரியா தீர்க்கதரிசியின் மூலம் தீர்க்கதரிசனமாக முன்அறிவிக்கப்பட்டபடி இரண்டு ஸ்திரீகள் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூச்சக்கரத்தில் ஆங்கில மொழியே மற்ற எல்லா மொழிகளிலும் உயர்ந்திருக்கின்றது. இந்த நிகழ்வுக்குள்ளாக கிறிஸ்துவின் ஆளுகை வெளியரங்கமாய் இருப்பதைக் காணமுடியும். அது கிறிஸ்தவர்களின் ஆளுமை, அது காணக்கூடிய ஆளுமை. மற்றொன்று பரத்திற்குரியதான ஆளுமை. அது வெளியரங்கமாகக் காணக்கூடியதாய் இருப்பதில்லை. இம்மைக்குரியதான அவருடைய ஆளுமை காணக்கூடியதாக இருக்கின்றது.
தீர்க்கதரிசனமாய் சாட்சியிடப்பட்டுள்ள அந்த ஆண்பிள்ளையினுடைய ஆளுமையானது மறைபொருளாகக் கொடுக்கப்பட்ட ஆளுமை ஆகும். கர்த்தரது நாமம் இம்மைக்குரியவர்களுக்காக அறிவிக்கப்படுவதில்லை. அது மறுமை என்ற நித்திய ஜீவனுக்குரிய கிருபையாக சாட்சியிடப்பட்டுள்ளது. யூதராஜ சிங்கத்தினுடைய ஆளுமை இன்று வெளியரங்கமாக காணப்படுகின்றது. அதுபோலவே அந்த ஸ்திரீ கர்ப்பந்திறந்து பெற்றெடுக்கப்போகும் ஆண்பிள்ளையினுடைய ஆளுமையும் இந்தப் பூச்சக்கரத்தில் ஒருநாள் உயர்ந்து நிற்கும். அது அப்போது இம்மைக்குரிய ஆளுமையாக மாத்திரமே காணப்படும்; மறுமைக்குரிய ஜீவன் என்ற ஆத்துமா அப்போது எடுபட்டுவிடும்; அது கிருபை இழந்த நிலையாகும். கிருபையினை இழந்து நிற்கும் இஸ்ரவேலரைப்போல, கிறிஸ்தவர்களும் ஒருநாள் கிருபையினை இழந்துபோவார்கள்.
இந்த ஆண்பிள்ளையினுடைய ஆளுமை இரும்புக்கோலாக இந்தப் பூச்சக்கரத்தில் எழும்பி நிற்கும் வேளையில் கிறிஸ்தவர்கள் கிருபை இழந்தவர்களாய் இருப்பார்கள். தீர்க்கதரிசிகள் தங்களுடைய கையில் கோலைப் பற்றிக்கொண்டிருப்பது போன்ற நிகழ்வுகள் வேதாகமத்தில் அநேக இடங்களில் சாட்சியிடப்பட்டுள்ளது. தனது தடியினைக் கொடுத்து அனுப்புகின்றார் எலிசா. மோசேயினுடைய கரத்திலும் ஒரு கோல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வைத்திருந்த கோலினைக் குறித்து மரத்தடி என்று கூறப்பட்டுள்ளதை வேதத்தில் வாசிக்கின்றோம். 12 கோத்திரத்திலிருந்தும் ஆசாரியத்துவத்திற்காக யார் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்று ஒரு வாக்குவாதம் எழுந்தபோது கோத்திரத்திற்கு ஒரு கோல் வீதம் கொண்டுவந்தார்கள். அது மரக்கோல் ஆகும். அங்கே, ஆரோனுடைய கோல் மாத்திரம் துளிர்த்தது. ஆரோனுடைய கோல் வாதுமை மரத்தின் கோல் ஆகும். ஆகவே அது வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.
எண். 17: 5, 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.
மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது."
ஆரோனுடைய கோல் துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
வெளி. 12-ல் கூறப்பட்ட அந்தக்கோலானது அப்படிப்பட்ட கோல் அல்ல. "நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்" (எண். 17: 5) என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவனுடைய கோல் மரத்தின் கோலாகும். எனவே அது துளிர்த்தது. இரும்புக்கோலானது ஒருபோதும் துளிர்க்காது. துளிர்க்காத அந்தக்கோல், தெரிந்துகொள்ளப்படுதலுக்குரியது அல்ல. தெரிந்துகொள்ளப் பட்டவனுடைய கோலே துளிர்க்கும் என்று பார்த்தோம். வெளி. 12-ல் கூறப்பட்டுள்ள இந்த இரும்புத்தடியானது தெரிந்துகொள்ளப்பட்டவனுடைய கோல் அல்ல; அது ஜீவனுக்குரியது அல்ல. இரும்புக்கோல் கொண்ட இந்த ஆளுமை தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இல்லாதிருக்கக்கூடிய ஒரு கால நிலையாகும்; அது ஜீவன் என்ற ஒளி இல்லாதிருக்கக்கூடிய ஒரு காலமாகும். அந்த ஆண் குழந்தையினுடைய ஆளுகை இரும்புக்கோலை தனது கையில் ஏந்தியபடியான ஒரு ஆளுமையாகும். அந்த ஆண்பிள்ளையினுடைய ஆளுகை இரும்புக்கோலை கரத்தில் வைத்து ஆளுகை செய்யக்கூடிய ஒரு ஆளுகையாகும். அவனது ஆளுமையின் காலத்தில் தெரிந்துகொள்ளப்படுதல் என்ற கிரியை இல்லாதிருக்கக்கூடிய காலமாகும். எனவே கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் இந்தப் பூமியில் இருக்கமாட்டார்கள். காரணம், அது கிருபை நிறைவேறி இருக்கும் காலமாகும். இரும்புக்கோல் கொண்ட இந்த ஆளுமை எழும்பி வரும்போது எவைகள் சம்பவிக்கும் என்பதை வெளி. 12ம் அதிகாரத்தில் பார்க்கின்றோம்.
சங். 2: 9-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்."
இரும்புக்கோல் என்பது யுத்தத்தினைக் குறித்த ஒரு காரியமாகும். மரக்கோல் என்பது வார்த்தைக்குரிய சாட்சியாகும். இரும்புக்கோலினுடைய இந்த ஆளுமையானது யுத்தத்தில் ஜெயங்கொள்ளக்கூடிய தன்மை கொண்டதாய் இருக்கும். உதாரணமாக நாம் எடுத்துக்கொண்டால், உலகம் முழுவதிலும் ஆங்கிலேயரின் ஆளுமை கோலூன்றி நின்றபோது அவர்களின் தேசம் சூரியன் அஸ்தமிக்காத தேசமாக இருந்தது. அது அன்றைக்கென்று கொடுக்கப்பட்டிருந்த ஆளுமையின் காலமாகும். அந்த ஆளுமை உலகம் முழுவதும் மேலோங்கி இருந்தது. அந்த ஆளுமையே இரும்புக்கோலால் செய்யக்கூடிய ஆளுமையாகும். தன்னை எதிர்த்தவர்களை நொறுக்கிப்போடக்கூடிய ஒரு ஆளுமையின் பெலன் அதனிடம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது இரும்புக்கோலின் ஆளுமை என்று சாட்சியிடப்பட்டுள்ளது.
சங். 2: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;"
"நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;" என்று சங்கீதக்காரன் சாட்சியிட்ட காலம் குமாரனின் பிறப்பு குறித்த தீர்க்கதரிசன காலம். அப்போது குமாரனின் ஆளுமை அங்கே இல்லாதிருந்தது. அதன்பின், பல ஆண்டுகள் கடந்தபின்னரே, அந்த ஆளுமை எழுந்துள்ளது. அது சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற ஆளுமையாகக் காணப்பட்டது. இதற்கு வரலாறு சாட்சி.
சங். 2: 10, 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.”
இரும்புக்கோலால் எழும்பக்கூடிய இந்த ஆளுமை குமாரன் கோபங்கொள்ளும்போது எழும்பப் போகும் ஆளுமையாகும். குமாரனின் கோபம் பற்றி எரியும் நேரம் இந்த இரும்புக்கோலினுடைய ஆளுமை எழும்பும். "இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;” என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியபோது அந்தக் கோபம் பற்றி எரியவில்லை. குமாரன் கோபம் கொள்வதற்கென்று ஒரு காலம் முன் குறிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் தன் நிலையில் பூரணப்பட்டிருக்கக்கூடிய காலமாகும். அவருடைய மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த நிகழ்வு ஆரம்பமாகும். அதன்பின்னரே இரும்புகோலின் ஆளுமை எழும்பும் என்று சாட்சியிடப்பட்டுள்ளது.
வெளி. 12: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.”
குமாரன் இந்தப் பூமியில் பிறக்கும் முன்னரே சங்கீதக்காரன் இதனை தீர்க்கதரிசனமாய் சாட்சியிட்டான். அதுபோல இந்த ஆண் பிள்ளையினைக்குறித்தும் முன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தையாய் பிறக்கும்போது இதனிடம் ஆளுமை இராது. குமாரன் குழந்தையாய் இருந்தபோது, அதனிடம் ஆளுமை இல்லாதிருந்ததுபோலவே, இந்தக் குழந்தை பிறந்திருக்கும் போதும் அதனிடம் ஆளுமை இருக்காது. அது தன் நிலையில் பூரணப்பட்டபின்னரே இந்தப் பூச்சக்கரத்தில் அதனுடைய ஆளுமை எழும்பும். அந்த ஆளுமையானது அவளுடைய பிள்ளைகள் தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரே ஆரம்பமாகும். அந்த ஆளுமை மேலோங்கி நிற்கப்போகின்ற ஒரு ஆளுமையாகும். அந்த ஆளுமை இரும்புக்கோல் கொண்டு அரசாட்சி செய்யக்கூடிய ஆளுமையாக அமையும். அது உபத்திரவக் காலமாகவே இந்தப் பூமிக்கு இருக்கும்.
சங். 2: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;"
"ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும்... கொடுப்பேன்;" என்று முன்னறிவிக்கப்பட்ட பிரகாரமாக இன்று கிறிஸ்தவம் என்ற இந்த ஜாதிகள் திரளாய் மேலேழும்பியிருக்கின்றார்கள். பூமியின் மொத்த ஜனத்தொகையில் இது அதிகப்படியான ஜனமாகக் காணப்படுகின்றது. கிறிஸ்துவின் இந்த ஜாதிகள் அவருக்கு எதிராக, அதாவது முற்றிலுமாக சத்தியத்திற்கு எதிரான கிரியைகளைச் செய்யும் நேரம் குமாரன் கோபங்கொள்ளுகின்ற நேரமாகும். கன்னிகை கர்ப்பவதியாகி பிறந்த குமாரன் மூலம் கிருபை அனுப்பப்பட்டது. அதன்பின்னர், குமாரனின் ஆளுமை கிறிஸ்தவ ராஜ்யமாய் எழும்பிற்று. குமாரனின் கோபம் வெளிப்படும்போது எழும்பப்போகும் ஆளுமையானது இரும்புக்கோல் கொண்ட ஆளுமையாய் இருக்கும். அப்போது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இந்தப் பூமியில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யாவரும் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பார்கள். அதன் பின்னரே, குமாரனுடைய கோபம் எழும்பும். அப்போது பூமியின் எல்லைகளில் இரும்புக்கோலால் ஆளுமை செய்யக்கூடிய ஒரு ஆளுமை வெளிப்படும். அந்த ஆளுமை அமைதியான ஆளுமையாய் இருக்காது. அது அவரின் கோபத்தில் எழும்பும் ஆளுமையாக அமையும்.
வெளி. 12: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன."
இந்த ஆண்பிள்ளையினைப் பெற்றெடுத்த அந்த ஸ்திரீ எப்படிப்பட்ட தன்மையில் இருப்பாள் என்று இங்கே முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மரியாள் என்ற கன்னிகை (கன்னிகையான ஒரு ஸ்திரீ) ஒரு ஆண்பிள்ளையினைப் பெற்றெடுத்தாள். அந்த ஆண்பிள்ளைக்கு இயேசுகிறிஸ்து என்று பெயாரிடப்பட்டது. அப்போது “அந்த வார்த்தை மாமிசமானது”. இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் அந்த வார்த்தை மாமிசமாக உருவானது. அதனைக் கர்ப்பம் சுமந்து பெற்றெடுத்தவள் மரியாள். அதற்கென்று அனுமதிக்கப்பட்ட காலத்தில் இவைகள் சம்பவித்தது. ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்பது தீர்க்கதரிசனம். அங்கே மரியாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அந்தக் குமாரன் மகிமையடைந்ததும் அந்தக் குமாரனின் நாமத்தில் விசுவாசம் கொண்டு அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அவரின் பிள்ளைகளானார்கள். அவரின் இந்த ஜனம் பூமியில் பெருகிற்று. மேலும் அவர்களின் ஆளுமையும் பரந்துவிரிந்தது. இந்த ஆளுமை கிறிஸ்தவர்களாகிய அவரது பிள்ளைகள் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட ஆளுகையாகும். மாமிசத்தில் எழுந்த இந்த ஆளுமையானது கிறிஸ்தவ நாடுகள் மூலம் உலகெங்கும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆளுகை கொண்டுள்ள இந்த ஆளுமையினைப் போல வேறொரு ஆளுகை எழும்பும். "அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள் என்று பார்க்கின்றோம்." கன்னிகை கர்ப்பவதியானதுபோல, இங்கே ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகக்கூடிய ஒரு நிலை. அவளுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக அந்தக் கன்னிகையாக முன்குறிக்கப்பட்டவள் மரியாள். "இதோ, ஒரு கன்னிகை..." என்று கூறப்பட்டுள்ளது. மரியாள் புருஷனுக்கென்று நியமிக்கப்பட்டவள்; ஆனால் அவர்கள் கூடிவருமுன்னே, பாரிசுத்த ஆவியானவர் அவள்மீது நிழலிட்டார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குமாரனாகிய கிறிஸ்து ஒரு கன்னிகையிடமிருந்து பிறந்தார். ஆனால் பின் நிகழ்வில் கூறப்பட்டுள்ளவளைக் குறித்து ஸ்திரீ என்று கூறப்பட்டிருக்கின்றது. அவள் சூரியனை அணிந்திருப்பாள் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்குறிக்கப்பட்ட இந்த நிகழ்வு நிகழும்போது அந்த ஸ்திரீ தனது தலையில் சூரியனை அணிந்திருக்க வேண்டும். பாதங்களின் கீழ் சந்திரனும், சிரசின் மீது 12 நட்சத்திரங்களும் இருக்கும் நிலை காணப்படவேண்டும். சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைப் பற்றி வேதம் கூறுவதைக் குறித்துப் பார்ப்போம்.
ஆதி. 37: 9, 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்."
சூரியனும் சந்திரனும் தகப்பனையும் தாயையும் குறிப்பிடுவதாகும். அந்த ஸ்திரீயானவள் சூரியனை அணிந்திருந்தாள்; அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கி¡£டமும் இருந்தன. தகப்பன், தாய் மற்றும் சகோதரர்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ள நிலை. பன்னிரண்டு சகோதரர்கள் என்பது கோத்திரப்பிதாக்களைக் குறித்ததாகும். சூரியன் என்பது பிதாவைக் குறித்ததாகும். அவள் பிதாவின் நாமத்தினை தன்னகத்தே அணிந்தவளாக இருப்பாள். பிதாவின் நாமத்தினை கர்ப்பந்தரிப்பவளாக இருப்பாள். மரியாள் பிதாவின் நாமத்தினைக் கொண்ட வார்த்தையைக் கர்ப்பந்தரித்தாள்; அந்தக் கர்ப்பப்பிறப்பிற்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்று நாமம் இடப்பட்டது. அந்த நாமமே பிதாவின் நாமமாக பின்னர் உயர்த்தப்பட்டது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமம் பிதாவின் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமாக இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
கன்னிகையாயிருந்த மரியாள் அந்த வார்த்தையினை தன்னுடைய வயிற்றில் சுமந்தாள். அது வார்த்தையாக அவளிடம் வந்தது. சூரியன் என்பது பிதாவின் நாமத்தினைக் குறிப்பதாகும். பிதாவின் நாமத்தினை கன்னிகையான மரியாள் தனது கர்ப்பத்தில் கொண்டுவந்ததுபோல இந்த ஸ்திரீயும் பிதாவின் நாமத்தினை தனது கர்ப்பத்தில் சுமப்பவளாய் வெளிப்படுவாள். பிதாவின் நாமத்தினை அணிந்துவரும் அந்த ஸ்திரீயின் பாதங்களின்கீழ் சந்திரன் இருந்தது என்று பார்க்கின்றோம். சந்திரன் என்பது தாயைக் குறிப்பதாகும். அவள் பிதாவின் நாமம் தரிப்பிக்கப்பட்டவரை கர்ப்பம் சுமந்து வருவாள். தனது கர்ப்பத்தில் இருக்கின்ற குமாரனுடைய நாமத்தினை அவள் அறிந்தவள். தான் கர்ப்பத்தில் சுமக்கும் அந்தக் குழந்தைக்கு யார் தகப்பன் என்று மரியாள் அறிந்திருந்ததுபோல, அந்த ஸ்திரீயும், தான் அணிந்து கொண்டிருப்பவர் இன்னார் என்பதை அறிவாள். மேலும் அவளுடைய பாதத்தின் கீழ் சந்திரன் என்று கூறப்பட்டுள்ளது, சந்திரன் என்பது தாய். அது சபை என்ற பொருள்படும். அது ஏழு சபைக்காலங்களாகும். அதாவது அவளது பாதங்களின் கீழ் உள்ள சந்திரன் என்பது சபையினைக் குறிப்பதாகும். அது ஏழு சபைக்காலங்களும் நிறைவேறிய காலமாய் இருப்பதால் அவளுடைய பாதத்தின்கீழ் சந்திரன் இருப்பதாய் கூறப்பட்டுள்ளது. "அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடம்..." என்று கூறப்பட்டுள்ளது. அவைகள் பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களின் மகிமையினைக் கொண்ட இஸ்ரவேலர்கள்.
ஒரு ஸ்திரீயினைக் குறித்து இவ்விதமான அடையாளம் கொண்டவள் என்று கூறுகின்றோம் அல்லவா! இவள் இந்த நிறம் கொண்டவள்; இந்த வண்ணத்தில் சேலை அணிந்திருப்பவள்; மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பவள்; கையில் கைக்கடிகாரம் அணிந்திருப்பவள்; தோளில் பை (bag) அணிந்திருப்பவள் என்று இப்படியாக அடையாளம் கூறுவதுபோல, இங்கே இந்த ஸ்திரீயினைக் குறித்த அடையாளம் கூறப்பட்டிருக்கின்றது. அந்த ஸ்திரீ ஒரு நாமத்தினை அணிந்தவளாக இருக்கின்றாள். அவளுடைய பாதத்தின்கீழ் சுவிசேஷம் என்னும் பாதரட்சை இருந்தது, அது நிறைவேறிய சபைக்காலம்; அது நிறைவடைந்ததால், அது அவள் பாதங்களின் கீழே இருக்கின்றது. அவள் சிரசின் மேலே இஸ்ரவேலர்களின் கோத்திரங்களைக் குறிக்கும் 12 நட்சத்திரங்கள். அது இஸ்ரவேலருக்குக் கிருபையினைக் கொடுக்கும் மகிமையின் காலமாகக் குறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்களுக்குள் கிருபை என்ற ஆத்தும ஜனனம் செல்லக்கூடிய அந்த வேளையில் இந்த ஸ்திரீ குமாரனை கர்ப்பந்தரித்துப் பெறுகின்றாள். இயேசுகிறிஸ்து என்ற குமாரனை மரியாள் கர்ப்பந்தரித்த காலம் எப்படியான கிரியைக்குரியதாக இருந்ததோ, அதேபோன்றதொரு கிரியை இந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி குமாரனைப் பெறக்கூடிய காலத்திலும் சம்பவிக்க வேண்டும். மரியாள் கர்ப்பவதியானபோது, இஸ்ரவேலர்களுக்குள் கிருபை நிறைவடைந்தது. அதுபோலவே இங்கே இந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, குமாரன் என்ற "வார்த்தை" நாமமாய் ஜெனிப்பிக்கப்படும் வேளையில் கிருபையானது புறஜாதிகளுக்கு முடிவடைந்து இஸ்ரவேலருக்குள் செல்லும் காலமாக சாட்சியிடப்பட்டுள்ளது.
முதலாவதாக வந்த நிகழ்வின்போது, மரியாள் கர்ப்பவதியானாள். அப்போது பழைய ஏற்பாடு நிறைவடைந்து புதிய ஏற்பாடு ஆரம்பமானது. இரண்டாவதாக இந்த ஸ்திரீ கர்ப்பவதியாகும்போது புதிய ஏற்பாடு நிறைவடைந்து கடைசி ஏற்பாடு ஆரம்பமாகும். மரியாள் கர்ப்பந்தரித்து பெற்றெடுத்த பிள்ளை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தினை பிதாவின் நாமமாக உயர்த்தியதுபோல, கடைசி ஏற்பாட்டிலும் சாட்சியிடப்பட்டுள்ள அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து பிறக்கக்கூடிய பிள்ளையும் தேவனுடைய நாமத்தினை தன்னகத்தே கொண்டு வெளிப்படும். அந்த நாமம் "தேவனுடைய வார்த்தை" என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் நிறைவில் மரியாள் என்ற ஸ்திரீ கர்ப்பந்தரித்தாள்; அந்த ஸ்திரீயின் நாமம் இன்று வரையிலும் பூமியில் மேலோங்கி நிற்கின்றது. அவள் பெற்றெடுத்த பிள்ளையின் நாமமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமமாய் இன்றும் சாட்சியிடப்பட்டு வருகின்றது. வார்த்தை மாமிசமாகி பிதாவின் நாமமாய் உயர்ந்ததுபோல, இந்த ஸ்திரீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையின் நாமமும் "வார்த்தை" என்ற பிதாவின் நாமமாக உயர்த்தப்படும். குழந்தையைப் பெற்றபின் அந்த ஸ்திரீக்கு நேரிடப்போவதைக் குறித்தும் தீர்க்கதரிசனம் கூறப்பட்டிருக்கின்றது.
வெளி. 12: 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது."
ஸ்திரீயானவள் வனாந்திரத்திற்கு ஓடிப்போவாள் எனவும், அவளைப் போசிப்பதற்கான ஸ்தலமும் ஆயத்தமாக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அப்போது ஒரு யுத்தம் நேரிட வேண்டும். அது மிகாவேலுக்கும் வலுசர்ப்பத்திற்கும் ஏற்படக்கூடிய யுத்தமாய் இருக்கும். அது வார்த்தையின் யுத்தமாகும். இந்த யுத்தத்தின்போது ஸ்திரீ பெற்ற குமாரன் தன் நிலையில் பூரணப்பட்டிருப்பான். மரியாள் தன் இருதயத்தில் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டாள் என்று பார்க்கின்றோம். கானாவூர் கலியாண வீட்டில் திராட்சரசம் குறைவுபட்டபோது, அவருடைய தாய் அவரிடம்: திராட்சரசம் குறைவுபட்டதைக் குறித்து கூறினாள். அப்போது ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லையே என்றார். பின்னர், தன்னுடைய வேளை வந்தபோது, அங்கே ஜாடிகளில் தண்ணீரை ஊற்றும்படி கூறினார். இது அவர் முதலாவதாக அற்புதம் நடப்பித்த கானாவூர் கலியாண வீட்டில் நிகழ்ந்தது.
இங்கே வார்த்தை என்ற நாமத்தினை கர்ப்பந்தரித்துப் பெற்ற அந்த ஸ்திரீயானவள் வனாந்திரத்திற்கு ஓடிப்போகின்றாள். அந்த ஸ்திரீ பிதாவின் நாமத்தினை அணிந்திருந்தாலும், அவள் ராஜஸ்திரீயாக பூமிக்குரிய ஆளுகையினைக் கொண்டவளாக இருப்பதில்லை. அப்போது பாபிலோன் ராஜஸ்திரீயாக அமர்ந்திருப்பாள். வனாந்திரத்திற்கு ஓடிப்போகும் நிலையில் அந்த ஸ்திரீக்கு "அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது" என்று பார்க்கின்றோம். அந்த ஸ்திரீக்கு ஒரு இடம் உண்டாக்கப்பட்டிருக்கும். வார்த்தையினைப் பெற்றெடுத்த அந்த ஸ்திரீயை அப்போது கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; எனவே அவள் வனாந்திரத்திற்கு ஓடிப்போகின்றாள். இந்த நிலையில், கிருபையானது இஸ்ரவேலர்களுக்குள் செல்லும்; இது அவர்களுக்குரிய இரட்சிப்பின் காலம். அந்த ஸ்திரீ பெற்றெடுத்த ஆண் பிள்ளை இரகசிய வருகை வரையிலும் கிறிஸ்தவர்களிடமும், இரகசிய வருகைக்குப் பின்னர் இஸ்ரவேலர்களிடத்திலும் தன்னைக்குறித்து சாட்சியிடும். அது 3 1/2 தலைமுறை மட்டும் இஸ்ரவேலர்களுக்கு இரட்சிப்பினைக் கொடுக்கும் காலமாகும். அப்போது இஸ்ரவேலர்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த ஜீவன் அவர்கள் பெற்றுக்கொள்ளப்போகும் ஆவியின் சரீரமாகும். கிறிஸ்துவின் அதாவது கிறிஸ்தவர்களின் ஆளுமையின் காலம் நிறைவுபெற்றபின், மற்றொரு ஆளுமை எழும்பும். அது இரும்புக்கோலுடைய ஆளுமையாகும். அப்போது ஆத்துமாவை ஜெனிப்பிக்கக்கூடிய தன்மை மனுஷனிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். இந்த நிலையில் எழும்பும் ஆளுமையானது இரும்புக்கோலின் ஆளுமையாக அமையும். அது குமாரனின் கோபத்தை வெளிப்படுத்தும் ஆளுமை. இந்த ஆளுமை மறைவாய் இருந்து முற்பகுதியிலும் பகிரங்கமாய் பிற்பகுதியிலும் எழும்பும். அப்போஸ்தலர்கள் மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டபோது, கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதிலும் பலுகிப் பெருகி இருப்பார்கள் என்றும், உலகம் முழுவதிலும் ஆளுமைக்குரிய கிறிஸ்துவின் நாமம் தரிப்பிக்கப்பட்ட ஜனம் எழும்புவார்கள் என்பதும் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்தது. அன்று அது மறைபொருளாக இருந்தது. இன்று அந்த மறைபொருள் வெளியரங்கமாக இருக்கின்றது. இன்று அவருடைய ஆளுமைக்குள்ளான பிள்ளைகளாகிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உயர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் ஆளும் ராஜ்யங்கள் வல்லரசுகளாய் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
சக. 9: 9, 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்."
கிறிஸ்து மாமிசத்தில் வெளிப்படும்போது, அவருடைய ஆளுமை ஒரு சமுத்திரம் தொடங்கி, மறுசமுத்திரம் வரைக்கும், அதாவது பூமியின் எல்லைகள் பரியந்தம் எழும்பும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முன்னறிக்கப்பட்டது இன்று நிறைவேறியிருக்கின்றது. "அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரம் தொடங்கி மறுசமுத்திரம் வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்" என்று கூறப்பட்ட வேளையில் அவர், என்னுடைய ராஜ்யம் இம்மைக்குரியது அல்ல என்றார். ஆனால் இன்று அந்த ஆளுமை இம்மைக்குரியதில் பூமி முழுவதிலும் ஆளுமை செய்யக்கூடியதாய் இருக்கின்றது. அன்று மாமிசத்திற்குரியதாய் இல்லாமல் ஆவிக்குரிய தன்மையில் சாட்சியிடப்பட்டவைகள், இன்று கிறிஸ்தவர்களாகிய அவரது ஜனத்தின் மத்தியில் காணக்கூடியதாய் நிறைவேறி இருக்கின்றது.
வெளி. 12: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது."
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மூலம் எழுந்துள்ள அவரது ஆளுமை காணத்தக்கவிதமாய் எழும்பியிருப்பதுபோல, இரும்புக்கோல் கொண்ட அந்த ஆண்பிள்ளையின் ஆளுமையும் ஒரு நாள் எழும்பும். கழுதைமறிமீது ஏறிவந்தவர் ஆளுமை செய்வார் என்று முன் நடப்பாரும் பின் நடப்பாரும் கூறியபோது, அந்த ஆளுமை அவரிடம் இல்லாதிருந்தது. அந்த ஆளுமை அன்று ஆவிக்குரிய ஆளுமையாக இருந்தது. மாமிசத்திற்குரிய அந்த ஆளுமை மறைபொருளாகவே இருந்தது. அதுபோலவே, இந்த ஆண் பிள்ளையினுடைய ஆளுமையும் மறைவாக இருப்பதற்கென்று ஒரு காலமும், அந்த ஆளுமை வெளியரங்கமாக இருப்பதற்கென்று ஒரு காலமும் முன்குறிக்கப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலர்கள் இரட்சிப்பினைப் பெற்ற பின்னர், அந்தக் கோல் இரும்புக்கோலாக வந்து ஆளுமை செய்யும். ஆவிக்குரிய ஆளுமை கொண்ட அந்த ஆண்பிள்ளையின் கிரியை நிறைவடைந்தபின் மாமிசத்திற்குள்ளான ஆளுமை எழும்பும். அப்போது எழும்பக்கூடிய ஆளுமை கொடுங்கோல் கொண்ட தன்மையான ஆட்சியாக அமையும். கர்த்தரது நாமமாகிய "வார்த்தை" என்ற நாமத்தினை விசுவாசிக்கக்கூடிய விசுவாசிகள் அதிகமாகக் கொண்ட ஒரு தேசம் இந்தப் பூச்சக்கரம் முழுவதையும் ஆளுகை செய்யும். அதனது ஆளுமை இரும்புக்கோலைக் கொண்டு செய்யும் ஒரு ஆளுமையாக இருக்கும். இந்த ஆளுமையின்போது இந்தப் பூமியில் உபத்திரவம் ஆரம்பமாகும். காரணம், அப்போது குமாரனுடைய கோபம் எழும்பி நிற்கும்.
வெளி. 19: 15-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்."
"வார்த்தை" ஆளுமைக்குரியதாய் இந்தப் பூச்சக்கரமெங்கும் கிரியை செய்யக்கூடிய வேளையானது உக்கிர கோபத்தினால் எழும்பக்கூடிய ஒரு ஆளுமையாகவே காணப்படும்.
வெளி. 19: 13-15-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்."
"வார்த்தை" என்ற நாமத்தின் ஆவிக்குரிய கிரியை நிறைவடைந்தபின்னர், ஆளுமை மாமிசத்தில் வெளிப்படும். சாட்சியிடப்படும் தேவனுடைய நாமமாகிய "வார்த்தை" என்ற நாமத்தினை விசுவாசிக்கக்கூடிய விசுவாசிகளை அதிகமாய் கொண்ட ஒரு நாடு இந்தப் பூச்சக்கரத்தில் இரும்புக்கோலால் தனது அரசாட்சியினை ஆளுமையோடு ஸ்தாபிக்கும். அப்போது தேவனுடைய கோபம், குமாரனுடைய கிரியைகளின் மூலமாக இந்தப் பூச்சக்கரத்தில் நிறைவேறும். இவைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒரு அடையாளம் காணப்படும். அந்த அடையாளமானது ஆவிக்குரிய தன்மையிலான அந்த ஸ்திரீயினுடைய கிரியைகள் நிறைவடைய வேண்டும் என்பதே.
வெளி. 12: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன."
இந்த ஸ்திரீயினைக் குறித்து இந்தப் பூச்சக்கரம் முழுவதும் சாட்சியிடப்படும். அவள் சூரியனை அணிந்திருப்பதையும், அவளுடைய பாதத்தின்கீழ் சந்திரன் இருப்பதையும் அவளுடைய சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்கள் கொண்ட கிரீடம் இருப்பதையும் அடையாளம் காட்டி அவள் சாட்சியிடப்படுவாள். அவளது கர்ப்பக்கால கிரியைகள் முதலாவது சாட்சியிடப்படும். இது முதலாவது அடையாளமாகும்.
அதன் பின்னர் இரண்டாவதாக ஒரு அடையாளம் நிகழும்.
வெளி. 12: 2, 3-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.
அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது."
அவள் வருத்தத்தின் மத்தியிலும், இடுக்கத்தின் மத்தியிலும் அந்தக் குழந்தையை பிரசவிப்பாள். அவள் பிரசவிக்கக் கூடிய அந்த வேளை வலுசர்ப்பம் தனது கிரியைகளின் மூலம் எழும்பும். ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் உடைய மிருகத்தின் மூலம் தனது ஆளுமையினை வலுசர்ப்பமானது அப்போது வெளிப்படுத்தும். இவைகள் அடையாளங்களாகக் கூறப்பட்டிருக்கின்றது. அப்போது இந்த அடையாளங்களை எல்லாம் சாட்சியிடும் ஒரு ஊழியம் எழும்பும். அது இந்த அடையாளங்களை கிறிஸ்தவர்கள் மத்தியில் சாட்சியிடும்.
வெளி. 12: 7, 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று."
மாமிசத்தில் காணக்கூடிய இந்த ஆளுமையின் ராஜ்யம் எழும்பும் முன் ஆவிக்குரிய ஒரு யுத்தம் ஏற்படும். அந்த யுத்தத்தில் வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் தங்களது மகிமையின் ஸ்தலமாகிய இரண்டாம் வானத்திலிருந்து தள்ளப்படுவார்கள். அவர்கள் இருந்த அந்த இடம் அவர்களது மகிமையில் காணப்படாமல் போகும். இந்நிலையில் இரும்புக்கோலால் செய்யக்கூடிய அந்த ஆளுமை எழும்பும். இந்த நிகழ்வுகள் யாவும் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது நிகழும். அப்போது வலுசர்ப்பத்தின் கிரியைகள் அடையாளம் காட்டப்படும். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் வலுசர்ப்பத்தினை அடையாளம் காண்பார்கள். ஜெயங்கொள்பவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
வெளி. 12: 10, 11-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.
மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்."
வலுசர்ப்பத்தினை ஜெயங்கொள்பவர்கள் கீழ்க்காணும் தன்மைகள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முதலாவது அவர்கள் தங்கள் ஜீவனையும் பாராமல் மரணமேயானாலும், தாங்கள் பற்றிக்கொண்டிருக்கும் வார்த்தையில் உறுதியாயிருப்பார்கள். இரண்டாவதாக, அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம் என்று சாட்சியிடப்பட்டுள்ள அந்த ஜீவ வார்த்தையை பற்றிக் கொண்டவர்களாக இருப்பார்கள். மூன்றாவதாக, சாட்சியிட அனுப்பப்படும் சாட்சிகளின் வசனத்தினைப் பற்றிக்கொண்டவர்களாயும் இருப்பார்கள்.
இந்த மூன்று தன்மை கொண்டவர்கள், வலுசர்ப்பத்தினை ஜெயிப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பின்னர் கிறிஸ்தவர்களில் இந்த மூன்று தன்மை கொண்டவர்கள் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். ஜீவனைக் கொடுக்கக்கூடிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் புறஜாதிகளைவிட்டு அகலும். கிறிஸ்தவர்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள அந்த கிருபையின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருப்பார்கள். எனவே கிருபை அவர்களைவிட்டு நீங்கிவிடும். அதன்பின்னர், ஆவியின் சரீரம் என்னும் ஆத்தும ஜனனம் கிறிஸ்தவர்களைவிட்டு முற்றிலுமாக எடுக்கப்பட்டுவிடும், அது இஸ்ரவேலர்களிடம் பின்பறிப்பிற்காகக் கொண்டு செல்லப்படும்.
யோவானுக்கு வெளிப்படுத்தி கொடுக்கப்பட்ட அந்த ஸ்திரீ வார்த்தையினைக் கர்ப்பந்தரித்து, ஆளுமைக்குரிய அந்த ஆண்மகனைப் பெற்றுள்ளாள். அந்த ஆண்பிள்ளை வளர்ந்து பூரணப்பட்டபின், சாட்சியிடப்பட்டுள்ள இந்தக் கிரியைகளைச் செய்யும்.
நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட கர்த்தர் தம்முடைய கிருபையினை அளவில்லாமல் நமக்குக் கட்டளையிடுவாராக!
ஆமென்! ஆமென்!! ஆமென்!!!